ஷாட்ஸ்
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி எலிசி அரண்மனைக்குச் சென்றார். அதிபர் இம்மானுவல் மேக்ரான் அவரை வரவேற்று விருந்தளித்தார். பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை அதிபர் மேக்ரான் வழங்கி கவுரவித்தார்.