ஷாட்ஸ்
இஸ்ரேலில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது முதல் விமானம்
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித்தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அவர்களை மத்திய மந்திரி ராஜிவ் சந்திரசேகர் வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.