ஷாட்ஸ்

பாராளுமன்ற தேர்தலில் 330 இடங்களை பிடிப்போம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2023-07-19 10:54 IST   |   Update On 2023-07-19 10:55:00 IST

பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ''இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படும் அரசாக மத்திய அரசு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. எனவே பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும என்று நம்புகிறோம்'' என்றார்.

Similar News