ஷாட்ஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று இரவு புழல் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர். அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து நாளை காலை முதல் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.