ஷாட்ஸ்
அலாஸ்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.