ஷாட்ஸ்
தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு
தமிழகம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா உள்பட 22 மாநிலங்களுக்கான மாநில பேரிடர் நிதியாக 7,532 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி பேரிடர் காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும்.