ஷாட்ஸ்
உலக கோப்பை கிரிக்கெட் - இலங்கை கேப்டன் தசுன் ஷனகா காயத்தால் விலகல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியை வழிநடத்திய ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சமிகா கருணரத்னே சேர்க்கப்பட்டு உள்ளார். முதல் இரு ஆட்டங்களில் இலங்கை தோற்றுள்ள நிலையில், தசுன் ஷனகா விலகல் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.