ஷாட்ஸ்
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு- மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் அரசியல் சாசன மசோதா இன்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும்.