ஷாட்ஸ்
பிரதமர் பதவியில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை.. கார்கே பேச்சு
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். மேலும், மாநில அளவில் நம்மிடையே உள்ள கட்சிகளுக்குள் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தவை அல்ல. ஆனால் அவை மக்கள் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு பெரிய விஷயம் இல்லை என்றும் தெரிவித்தார்.