ஷாட்ஸ்
2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். இன்று வெளியான 2-வது ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பா.ஜ.க. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடுகள் அரங்கேறி உள்ளது. 2024 தேர்தலில் பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும் என்று கூறினார்.