ஷாட்ஸ்
சாலை பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை பெருங்குடி மண்டலத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சாலை பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் பணிகளின் தற்போதைய நிலையை கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.