ஷாட்ஸ்
ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்தார் - திருக்குறளை பரிசாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வந்தார். விமான நிலையத்துக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அப்போது ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை ஜனாதிபதியிடம் வழங்கினார்.