ஷாட்ஸ்

கச்சேரியின்போது ரசிகர்கள் மீது மைக்கை வீசி எறிந்த பிரபல ராப் பாடகி - அமெரிக்காவில் பரபரப்பு

Published On 2023-07-30 15:11 IST   |   Update On 2023-07-30 15:11:00 IST

அமெரிக்காவில் நடந்த கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமாடி பாடிக்கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த சிலர் அவர்மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கார்டி பி தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News