6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 7 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். பல வாக்குசாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காக காலை முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.