ஷாட்ஸ்
ஹர்திக்-இஷான் ஜோடி அசத்தல் - பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்களை குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி 267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.