ஷாட்ஸ்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு
ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.