ஷாட்ஸ்

கொனார்க் கோவிலின் காலசக்கர பின்னணியில் தலைவர்களை வரவேற்ற மோடி

Published On 2023-09-09 11:30 IST   |   Update On 2023-09-09 11:31:00 IST

பிரதமர் மோடி நின்று வரவேற்ற இடத்திற்கு பின்னால் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற சூரிய பகவான் கோவிலிலிருக்கும் கொனார்க் சக்கரத்தின் பிரதி அமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவன் மன்னரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது. ஒடிசாவின் சூரியபகவான் கோவிலில் உள்ள இச்சக்கரம், பண்டைய இந்தியர்களின் அறிவாற்றலையும், முன்னேறிய நாகரிக வளர்ச்சியையும், கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் அவர்களுக்கிருந்த நுண்ணறிவையும் பறைசாற்றும் விதமாக இருப்பதாக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

Similar News