ஷாட்ஸ்
சந்திரபாபு நாயுடுவிடம் மாரத்தான் விசாரணை
கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வரிடம், சிஐடி போலீசார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக விஜயவாடா மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.