ஷாட்ஸ்

உலக மல்யுத்த போட்டி - வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால்

Published On 2023-09-22 05:09 IST   |   Update On 2023-09-22 05:12:00 IST

செர்பியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடந்தது. 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், ஸ்வீடன் வீராங்கனை ஜோனா மால்கிரேனுடன் மோதினார். இதில் 16-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, வெண்கலம் பெற்ற அவர், பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

Similar News