ஷாட்ஸ்

அமர்நாத் யாத்திரை: பால்தால் முகாமில் இருந்து முதல் குழு புறப்பட்டது

Published On 2023-07-01 07:48 IST   |   Update On 2023-07-01 07:48:00 IST

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த வருடம் ஜூலை 1 (இன்று) முதல் ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை பனி லிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் வழியாக ஆளுநர் முதல் குழு பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் முகாமில் இருந்து முதல் குழு புறப்பட்டுள்ளது.

Similar News