ஷாட்ஸ்
பா.ஜ.க.வை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழ்நாட்டிற்கு கேடு- மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவாரூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் இந்திய நாட்டிற்கும், இந்தியாவின எதிர்காலத்திற்கும் கேடாக முடியும் என்றார். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ, செயல்பட்டு வெற்றியை பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் இந்திய அளவில் ஏற்பட்டாகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.