ஷாட்ஸ்

வருகிற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டி- அஜித் பவார் திட்டவட்டம்

Published On 2023-07-02 22:17 IST   |   Update On 2023-07-02 22:20:00 IST

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், " வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்" என்று கூறினார்.

Similar News