ஷாட்ஸ்
ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்.. ரஷியாவில் தவித்த பயணிகள் மாற்று விமானத்தில் புறப்பட்டனர்
என்ஜின் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதையடுத்து, பயணிகளை ஏற்றிச் செல்ல மாற்று விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானம் ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தை அடைந்த நிலையில், இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.