ஷாட்ஸ்
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு'
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.