ஷாட்ஸ்

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை நான்காவது கட்டமாக உயர்த்தப்பட்டது

Published On 2023-07-20 15:43 IST   |   Update On 2023-07-20 15:43:00 IST

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஏற்கனவே 3 கட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 4-வது முறையாக சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Similar News