ஷாட்ஸ்
ஆகஸ்ட் மாதத்தில் 1.59 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் - மத்திய நிதியமைச்சகம்
ஜிஎஸ்டி வரிவசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரிவசூல் ரூ.1,59,069 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 2022, ஆகஸ்டில் ரூ.1,43,612 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வரிவசூல் இந்தாண்டு ஆகஸ்டில் 1.59 லட்சம் கோடியாக உயர்ந்ததன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.