புதுச்சேரி

கோப்பு படம்.

லாட்டரி விற்பனை செய்த ஸ்டூடியோ உரிமையாளர் கைது

Published On 2023-03-17 14:34 IST   |   Update On 2023-03-17 14:34:00 IST
  • புதுவை வில்லியனூர் கணுவாப்பேட் மாதா கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
  • வாடிக்கையாளர்களை பிடிக்கும் ஏஜெண்டாக அந்தோணி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் கணுவாப்பேட் மாதா கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் வேலைய்யன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார்  அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமாக செல்போனில் பேசியபடி ஒரு சில துண்டு சீட்டுகளை கையில் வைத்து எழுதி கொண்டு இருந்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் ஏற்கனவே அந்த பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த அந்தோணி (வயது 70) என்பது தெரியவந்தது. வில்லியனூர் பகுதியில் வாடிக்கையாளர்களை பிடிக்கும் ஏஜெண்டாக அந்தோணி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதற்கு உதவியாக செயல்பட்டு வரும் புதுவையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்தோணியிடம் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம்,2 செல்போன்கள் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News