புதுச்சேரி

அண்ணாசாலையில் நடைபாதை அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுவை அண்ணா சாலையில் நடைபாதை அமைக்கும் பணி

Published On 2023-11-23 08:09 GMT   |   Update On 2023-11-23 08:09 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
  • சிறுபாலங்கள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை நகர பகுதிக்குட்பட்ட அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 3 ஆயிரத்து 759 மீ நீளமுள்ள நடைபாதை, வடிகால் வாய்க்கால் மேம்பாடு, ஆம்பூர் சாலையில் சேதமடைந்துள்ள சிறுபாலங்கள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ரூ.9 கோடியே 14 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கு பூமி பூஜை விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உருளையன்பேட்டை தொகுதி நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் சீனு திருஞானம், உதவிப்பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல்முருகன் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News