முதலியார்பேட்டை முத்து மாரியம்மன் கோவில்செடல் திருவிழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சாமி தரிசனம் செய்த காட்சி. அருகில் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் உள்ளனர்.
முத்து மாரியம்மன் கோவில் செடல்-தேர் திருவிழா
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
- வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார் பேட்டை சாமிநாதப் பிள்ளை வீதியில் முத்து மாரியம்மன் 32- ம் ஆண்டு செடல் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஆடி மாதம் 3 ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
இதனை தொடர்ந்து சக்தி கரகத்தோடு, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக முதலியார் பேட்டையில் உள்ள பல வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து செடல் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராஜி என்ற பாவாடைராயன், சங்கரய்யா, ராமதாஸ், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.