செய்திகள்
23 ஆண்டுக்கு பிறகு நாளை நடக்கிறது வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா
23 ஆண்டுக்கு பிறகு வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது. யாக சாலை பூஜைகள், குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக் குமாரசுவாமி, நவகிரகங் களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 29-ந்தேதி குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் 25-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை மங்களவாரம், விஷேசசாந்தி, பாவனா பிஷேகம் செய்விக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை விசேஷசாந்தி 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை 6-ம் கால யாக பூஜைகள் தொடங்கியது. மாலை 7-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 8-ம் கால யாக பூஜைகளுக்கு பின் கடங்கள் புறப்பாடு, தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. யாக சாலை பூஜைகள், குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாக சாலை பூஜைகளில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரியசுவாமிகள், திருமுதுகுன்றம் குமாரத்தேவர் ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர்.