செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பன்னிரு திருமுறை விழா

Published On 2018-02-26 07:24 GMT   |   Update On 2018-02-26 07:24 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பன்னிருதிருமுறை திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓதுவார் ஞானபூங்கோதை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக பிரபல இசையமைப்பாளரான கார்த்திக்ராஜா கலந்து கொண்டு பன்னிரு திருமுறை பற்றி விளக்கி பேசினார். அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு அகரமுதல்வன் இரண்டாம் திருமுறையும், லட்சுமணன் ஓதுவார் திருமுறை இன்னிசையும் வாசித்தனர்.

பின்னர் மாலை 4 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதையடுத்து இளையஞானி 3-ம் திருமுறையும், இந்திரா சவுந்திரராஜன் 4-ம் திருமுறையும் பாடி னர். அதனை தொடர்ந்து வெங்கடேசன் ஓதுவார் திருமுறை இன்னிசை வாசித்தார்.

நிகழ்ச்சியில் வெங்கடேசன் தீட்சிதர் உள்பட பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழா வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நிறைவு நாளன்று பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பரதம் ஆட உள்ளார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களும் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News