உலகம்

பாகிஸ்தானில் பஸ்சில் தீப்பிடித்து குழந்தைகள் உள்பட 21 பேர் பலி

Published On 2022-10-13 10:39 IST   |   Update On 2022-10-13 10:39:00 IST
  • பஸ்சுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பலியானார்கள்.
  • 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கராச்சி:

பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் நள்ளிரவு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அப்போது பஸ்சில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். ஆனால் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது. பயணிகள் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து தப்பினர்.

ஆனால் பஸ்சுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். பஸ்சில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தீப்பிடித்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ள பாதிப்பு குறைந்ததால் கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்கள் பஸ்சில் சென்ற போது விபத்தில் சிக்கினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள்.

Tags:    

Similar News