உலகம்

பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவரை கொல்ல தற்கொலை தாக்குதல்

Published On 2023-05-20 08:06 GMT   |   Update On 2023-05-20 08:06 GMT
  • தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
  • தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது நான் மரணத்திற்கு பயப்படவில்லை என்றார்.

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக். இவர் பலுசிஸ்தானின் சோப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருநபர், தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். ஆனால் காருக்குள் இருந்த சிராஜுல் ஹக் உள்பட சிலர் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது, நான் மரணத்திற்கு பயப்படவில்லை. நாட்டின் தொடர்ச்சியான பண வீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் காரணம் என்றார்.

இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கண்டனம் தெரித்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துமாறு பலுசிஸ்தான் அரசை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News