உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த ராணுவ படகை சுட்டு வீழ்த்திய ரஷிய படை

Published On 2023-08-23 10:58 IST   |   Update On 2023-08-23 11:10:00 IST
  • படகில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவுக்கு கிழக்கே சென்று கொண்டு இருந்தனர்.
  • ராணுவ படகை ரஷிய படைகள் அழித்ததாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கிவ்:

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது.

உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா ராணுவ படகு ஒன்றை உக்ரைனுக்கு வழங்கியது. இந்த படகில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவுக்கு கிழக்கே சென்று கொண்டு இருந்தனர்.

இந்த ராணுவ படகை ரஷிய படைகள் அழித்ததாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், உக்ரேனிய வீரர்கள் குழுவை ஏற்றிச் சென்ற படகை ரஷிய வீரர்கள் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளனர் என்று தெரிவித்தது.

ஆனால் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை. கருங்கடலில் உள்ள பாம்பு தீவு உக்ரைனின் ஒரு சிறிய புறக்காவல் நிலையமாகும். போருக்கு மத்தியில் அங்கிருந்து தானியங்களை அனுப்ப உக்ரைனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா கடந்த மாதம் வெளியேறியது. இந்த நிலையில் அந்த பகுதியில் உக்ரைன் வீரர்களை ரஷியா சுட்டு வீழ்த்தியது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News