உலகம்

இம்ரான்கான்

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான பேரணி மீண்டும் ஒத்திவைப்பு

Published On 2022-11-07 18:05 GMT   |   Update On 2022-11-07 18:05 GMT
  • இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்தது.
  • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

லாகூர்:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என அனைத்து ஊடகங்களுக்கும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதற்கிடையே, லாகூரில் இருந்தவாறே இம்ரான்கான் பேசுகையில், நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும் என தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான்கான் கட்சியினரின் பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை (10-ம் தேதி) முதல் மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான்கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News