உலகம்

இம்ரான்கான் கட்சி சமூக ஊடக பிரிவு தலைவர் கைது

Published On 2023-03-24 11:36 GMT   |   Update On 2023-03-24 11:36 GMT
  • அசீம் முனீருக்கு எதிராக பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
  • கைது நடவடிக்கைக்கு தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது அரசு கருவூலத்தில் இருந்த பரிசு பொருட்களை மலிவு விலையில் வாங்கி கோடிக்கணக்கில் விற்று முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது பெண் நீதிபதியை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பரிசு பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் இம்ரான்கான் கோர்ட்டில் ஆஜரானார். அந்த சமயத்தில் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டு முன்பு திரண்ட தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக 746 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த சமூக ஊடக பிரிவு தலைவர் அஸ்லாம் மஸ்வானி பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு எதிராக பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது.

Tags:    

Similar News