செய்திகள்

மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லி மீது சிறையில் தாக்குதலா? வழக்கறிஞர் மறுப்பு

Published On 2018-07-25 05:26 GMT   |   Update On 2018-07-25 05:26 GMT
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை சக கைதிகள் தாக்கியதாக வெளியான தகவலை அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளார். #DavidHeadley #DavidHeadleyAttacked
சிகாகோ:

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்தநிலையில், சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை கடந்த 8-ம் தேதி சக கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயம் அடைந்ததாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை டேவிட் ஹெட்லியின் வழக்கறிஞர் ஜான் தீஸ் மறுத்துள்ளார். ‘டேவிட் ஹெட்லி தற்போது எங்கு இருக்கிறார் என்பதை தற்போது என்னால் வெளியிட முடியாது. அதேசமயம் அவர் சிகாகோவிலோ மருத்துவமனையிலோ தற்போது இல்லை. ஹெட்லியுடன் நான் வழக்கம்போல் தொடர்பு கொண்டு வருகிறேன். இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை’ என்றார் ஜான் தீஸ். #DavidHeadley #DavidHeadleyAttacked #MumbaiAttack
Tags:    

Similar News