செய்திகள்

பிறந்த இரண்டு வாரத்தில் உறுப்பு தானத்தின் மூலம் 48 வயது பெண்ணிற்கு வாழ்வளித்த குழந்தை

Published On 2018-06-12 10:17 GMT   |   Update On 2018-06-12 10:17 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரத்தில் பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி 48 வயது பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #organdonor
அபுதாபி:

உலகில் பல கோடி மக்கள் சரியான மாற்று உறுப்பு கிடைக்காமல் இறந்து விடுகின்றனர். இதனால் உடல் உறுப்புதானம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை உணர்ந்த பலர் இறந்த பின் தங்கள் உடல்உறுப்புகளை தானமாக வழங்க முன் வருகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. குழந்தை இறந்து விடும் என்பதை அறிந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறினர். மேலும், உறுப்பு தானம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தனர்.

குழந்தையின் பெற்றோர் அனுமதி பெற்று மருத்துவர்கள் குழந்தை இறந்த பின் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு பொருத்தினர். 3 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட குழந்தையின் சிறுநீரகத்தை பெற்ற பெண் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதே போல் அனைவரும் உடல் உறுப்புதானம் செய்ய முன்வந்தால் பலரின் உயிரை காப்பாற்ற முடியும். #organdonor

Tags:    

Similar News