செய்திகள்

முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதி உதவியை குறைக்கும் டிரம்ப்

Published On 2017-03-16 13:32 GMT   |   Update On 2017-03-16 13:32 GMT
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன்னுடைய முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதியுதவியை பெருமளவில் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதியுதவியை பெருமளவில் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 சதவீதம் வரை நிதியுதவியை குறைக்க முடிவு செய்திருப்பதால், பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் வெளி நாடுகளுக்கு நிதி வழங்குவதற்காக அமெரிக்கா 40 பில்லியன் டாலர்களை செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியில் 60 சதவிகிதத்தை பொருளாதாரம், முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் 40 சதவிகிதத்தை பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அமெரிக்கா வழங்கும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், ஆப்கானிஸ்தான், ஈராக், கென்யா, நைஜீரியா, தான்சானியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, பாகிஸ்தான், இஸ்ரேல், எகிப்து, மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா அதிக அளவில் நிதியுதவி வழங்கி வருகிறது.

டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, வெளிநாடுகளுக்கு பணத்தை செலவு செய்வதை குறைத்துவிட்டு நாட்டிற்கு அதிகமாக செலவு செய்ய விரும்புவதாக பேசினார். எனவே, அதன் அடிப்படையில் அவரது முதல் பட்ஜெட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News