செய்திகள்
ஐபேட்

அசத்தல் அம்சங்களுடன் புது ஐபேட் அறிமுகம் செய்த ஆப்பிள்

Published On 2021-09-14 22:47 IST   |   Update On 2021-09-14 22:58:00 IST
ஆப்பிள் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஐபேட் அறிமுகம்.


ஆப்பிள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு துவங்கியது. ஆன்லைனில் நேரலை செய்யப்படும் ஆப்பிள் நிகழ்வில் அந்நிறுவனத்தின் ஆப்பிள் டிவி பிளஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு ஆப்பிள் டிவி பிளஸ் சேவையில் வழங்கப்பட இருக்கும் நிகழ்சிகள் குறித்த முண்ணோட்டம்  வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய ஐபேட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை முன்பைவிட அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.



புதிய ஐபேட் மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் செண்டர் ஸ்டேஜ் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வீடியோ கால் மேற்கொள்ளும் போது பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

இந்த ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் பேஸ் மாடலான 64 ஜிபி விலை 329 டாலர்கள் என துவங்குகிறது. 



ஐபேட் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய ஐபேட் மினி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், 12 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் முந்தைய மாடலை விட 40 சதவீதம் வேகமாக செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. இதன் விலை 499 டாலர்கள் ஆகும். 

Similar News