செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..!
- நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.
- கார்/வேனுக்கு ஒருமுறை சென்று ரிட்டன் வருவதற்கு 155 ரூபாய்க்கு பதில் 160 ரூபாய் வசூலிக்கப்படும்.
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மிகவும் பிசியாக இயங்கும் சுங்கச்சாவடிகளில் ஒன்று. நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும். அதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும். இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி முதல் (நாளைமறுநாள்), அதாவது திங்கட்கிழமை முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.
கார்/ பயணிகள் வேன்- ஒரு முறை செல்ல 105 ரூபாய் (பழைய கட்டணம் 105 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 160 ரூபாய் (பழைய கட்டணம் 155 ரூபாய்). மாதந்திர பாஸ் 3170 ரூபாய் (பழைய கட்டணம் 3100 ரூபாய்) ஆகும்.
லைட் கமர்சியல் வாகனங்கள்- ஒருமுறை செல்ல 185 ரூபாய் (பழைய கட்டணம் 185 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 275 ரூபாய் (பழைய கட்டணம் 270 ரூபாய்). மாதந்திர பாஸ் ரூ. 5545 (பழைய கட்டணம் 5420 ரூபாய்) ஆகும்.
டிரக்/பஸ்- ஒரு முறை செல்ல 370 ரூபாய் (பழைய கட்டணம் 360 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 555 ரூபாய் (பழைய கட்டணம் 540 ரூபாய்). மாதாந்திர பாஸ் ரூ. 11085 (பழைய கட்டணம் 10845 ரூபாய்).
மல்டிபிள் ஆக்சில் வாகனங்கள் (இரண்டு ஆக்சிலுக்கு மேற்பட்டவை)- ஒருமுறை செல்ல 595 ரூபாய் (பழைய கட்டணம் 580 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 890 ரூபாய் (பழைய கட்டணம் 870 ரூபாய்). மாதாந்திர பாஸ் 17820 ரூபாய் (பழைய கட்டணம் 17425 ரூபாய்).
பள்ளி பேருந்துகளுக்கு கிடையாது. மாதாந்திர பாஸ் 1000 ரூபாய் ஆகும் (பழைய கட்டணம் 100 ரூபாய்).