தமிழ்நாடு செய்திகள்
பாலிடெக்னிக்கில் சேர இனிமேல் கணிதம், அறிவியல் தேவையில்லை- தமிழக தொழில்நுட்ப இயக்ககம்
- இதுவரை அறிவியல் கணிதம் பாடங்கள் படித்தவர்கள்தான் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர முடியும்.
- 10-ம் வகுப்பு முடித்தவர்கள் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
2025-2026 கல்வி ஆண்டில் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய 3 பாடங்கள் இருக்கும் குரூப் படித்தவர்கள்தான் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர முடியும். இல்லையென்றால் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
இந்நிலையில் தமிழக தொழில்நுட்ப இயக்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பில் எந்த குரூப் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.