தமிழ்நாடு செய்திகள்

3 வயது சிறுவன் உயிரை பறித்த பலூன்: ராணிப்பேட்டையில் சோகம்

Published On 2025-11-09 17:49 IST   |   Update On 2025-11-09 17:49:00 IST
  • விளையாடிக் கொண்டிருந்த போது பலூனை விழுங்கியுள்ளார்.
  • மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்துள்ளான்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பலூனை விழுங்கிய 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே சாம் என்ற 3 வயது சிறுவன் பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத வகையில் பலூனை விழுங்கியதாக தெரிகிறது.

இதனால் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளான். இதைப்பார்த்த அந்த பையனின் தாய், பதறியடித்தபடி மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்தபோது, ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு மகனை மடியில் தூக்கி வைத்து தாய் கதறி அழுதியது பார்ப்போரை கண்கலங்க செய்தது.

3 வயது சிறுவனின் உயிரை விளைாட்டுப் பொருளான பலூன் பறித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News