தமிழ்நாடு செய்திகள்

இளம்பெண் கொலையில் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது

Published On 2022-08-30 12:50 IST   |   Update On 2022-08-30 12:50:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதா, கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார்.
  • கள்ளக்காதல் ஜோடி தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.

திருவள்ளூர்:

சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாபு. தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அமுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜோதீஸ்வரனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதா, கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பூட்டிய வீட்டில் அமுதாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடன் தங்கி இருந்த கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் மாயமாகி இருந்தார்.

அமுதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அமுதாவின் கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் பின்னரே அமுதா எப்படி கொலை செய்யப்பட்டார்? அதற்கான காரணம் என்ன? வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற முழுவிவரம் தெரியவரும்.

Tags:    

Similar News