தமிழ்நாடு செய்திகள்

நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை

Published On 2023-08-16 12:45 IST   |   Update On 2023-08-16 12:45:00 IST
  • கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.
  • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

தருமபுரி:

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனால் உடனடியாக பரிசல்களை கரைக்கு கொண்டு வந்தனர். பரிசல் இயக்க தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News