தமிழ்நாடு செய்திகள்

வாகனத்தில் அடிபட்டு இறந்த புலி.

மஞ்சூர் அருகே வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை பலி உயிரிழப்பு

Published On 2022-11-24 10:06 IST   |   Update On 2022-11-24 10:06:00 IST
  • புலி சோலை வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.
  • சிறுத்தை மீது மோதிய வாகனம் யாருடையது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா, தாய்சோலை இடையே புலி சோலை வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.

குறிப்பாக சிறுத்தைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. சாலையின் நடுவே சிறுத்தை இறந்து கிடந்ததால் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனசரகர் சீனிவாசன் சாலையில் இறந்து கிடந்த சிறுத்தையை மீட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தை ரோட்டை கடக்க முயன்றபோது வாகனம் மோதி இறந்துள்ளது தெரியவந்தது. சிறுத்தை மீது மோதிய வாகனம் யாருடையது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News