தமிழ்நாடு செய்திகள்

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்களை காணலாம்.

திண்டுக்கல் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-11-30 09:56 IST   |   Update On 2022-11-30 09:56:00 IST
  • சிறுமலை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
  • திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார்.

குள்ளனம்பட்டி:

ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் திண்டுக்கல்-நத்தம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுமலை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிறுமலையை அடுத்த தென்மலையைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 34), நிலக்கோட்டை அணைபட்டியைச் சேர்ந்த கணேஷ் பாண்டி (24) என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News