தமிழ்நாடு செய்திகள்

தாழங்குளம் பகுதியில் ஜே.சி.பி. மூலம் ஆக்ரமிப்பு வீடுகள் இடிப்பு- திருவேற்காடு நகராட்சி நடவடிக்கை

Published On 2023-08-19 12:20 IST   |   Update On 2023-08-19 12:20:00 IST
  • ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
  • ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

பூந்தமல்லி:

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழபுரம் பகுதியில் தாழங்குளம் என்ற இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தாழங்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது வருவாய் துறை மூலம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் மழைக்காலத்திற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தாழங்குளத்தில் அப்பகுதி மழை நீரை கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக உடனடியாக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று திருவேற்காடு போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா தலைமையில் பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி முன்னிலையில் வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் உள்பட 75 பேர் கொண்ட குழுவினர் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.பின்னர் அங்கிருந்த 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News