தமிழ்நாடு செய்திகள்
பெரியாரை நேசிக்கும் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்- செல்வபெருந்தகை அறிக்கை
- சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார்.
- பெரியாரை நேசிக்கும் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளை மக்களிடம் இருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் பெரியாரையும், அவரின் குடும்பத்தார்களையும் நேசிக்கும் ஜனநாயக சக்திகள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.