தமிழ்நாடு செய்திகள்

அண்ணன் இறந்த துக்க செய்தி கேட்டும் கடமையை செய்த ரேசன் கடை ஊழியர்

Published On 2024-01-12 13:42 IST   |   Update On 2024-01-12 15:27:00 IST
  • பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேசன் கடை ஒன்றில் எழுத்தராக லீமா என்பவர் பணியாற்றி வருகிறார்.
  • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பாளையங்கோட்டை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சகோதரரின் இறப்பு செய்தி கேட்டும் பெண் ஊழியர் ஒருவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிவிட்டு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேசன் கடை ஒன்றில் எழுத்தராக லீமா என்பவர் பணியாற்றி வருகிறார். லீமா ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்து கொண்டு இருந்தபோது அவருக்கு செல்போனில் அவரது சகோதரர் இறந்த செய்தி வந்தது. இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த லீமா கண்ணீரை துடைத்தபடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்து முடித்த அவர் பின்னர் கணக்குகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.


Tags:    

Similar News